அபுதாபி! உணவகத்தில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அபுதாபியில் உணவகத்தில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகரமான அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று மதியம் திடீரென்று பயங்கர வெடி சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து 120 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas cylinder blast in abudhabi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->