எனது ஹீரோவை இழந்துவிட்டேன்.! சோகத்தில் மூழ்கிய சவுரவ் கங்குலி.! அதிர்ச்சியில் ஹர்பஜன் சிங்.! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 60 ஆகும். உலக அளவில் கால்பந்து ஜாம்பவானான மரடோனாவின் மறைவுக்கு, விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள், பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மரடோனா மறைவு குறித்து பிசிசிஐ தலைவர்  சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய நாயகன் மறைந்துவிட்டார். நான் கால்பந்து போட்டிகளை பார்த்ததே உங்களுக்காகத்தான். உங்களின் அதிதீவிர ரசிகன் நான். கால்பந்து மேதை ஆழ்ந்த அமைதி ஆகிவிட்டார்.' என கங்குலி தெரிவித்துள்ளார்.

இதேபோல், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "கால்பந்து மேதை மரடோனா மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது" என தெரிவித்துள்ளார். 

மேலும் பிரேசில் கால்பந்து வீரர் பீலே, "எனது சிறந்த நண்பனை இழந்து விட்டேன். ஒரு கால்பந்து மேதையை இந்த உலகம் இழந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

கால்பந்து பிரபலங்களான லயோனல் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganguly mourning to Maradona


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal