'மாவோயிஸ்ட் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டதற்கு அக்கட்சியினருக்கும் தொடர்புள்ளது'; ஜேபி நட்டா குற்றசாட்டு..!
JP Nadda alleged that the previous Congress government had collaborated with the Maoists
கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில், சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் ஜிராம் பள்ளத்தாக்கில், தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதில், அப்போதைய மாநில தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் வித்யாசரண் சுக்லா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாஜ ஆட்சி அமைத்து 02 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், பாஜ முன்னாள் தேசிய செயல் தலைவருமான நட்டா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், 'முந்தைய காங்கிரஸ் ஆட்சியானது மாவோயிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு இடதுசாரி பயங்கரவாதத்தை அழித்து வருகிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2013-இல் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளராக தான் இருந்தபோது, ஜிராம் பள்ளத்தாக்கில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து தெரியும். அந்த பள்ளத்தாக்கு சம்பவம் குறித்தும், உள் விவரங்கள் குறித்து தன அறிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த சிலர் தங்கள் சொந்தக் கட்சி தலைவர்களையே கொல்வதற்கு காரணமாக இருந்ததாகவும், பாதுகாக்க வேண்டியவர்களே சதிகாரர்களாக மாறினால், சத்தீஸ்கரின் சாமானிய மக்களின் நிலை என்ன என்று பேசியுள்ளார்.

தற்போதையை முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நட்டா குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்கள் செயல்படுகின்றதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,500 பேர் சரண் அடைந்தள்ளனர். அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 1,853 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஜே .பி. நட்டா கூறியுள்ளார்.
English Summary
JP Nadda alleged that the previous Congress government had collaborated with the Maoists