டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், எதிர்வரும் 20-ஆம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

அத்துடன், பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்கவுள்ளார். நாட்டின் அதிபராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில் இந்தியா சார்பில் மத்தியவெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பதவியேற்பு விழா முடிந்ததும் புது நிர்வாகத்தினரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Foreign Minister S. Jaishankar to attend Donald Trump's inauguration ceremony


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->