முதல் முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி.! - Seithipunal
Seithipunal


மலேசியாவில் நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு உதவ வேண்டும் என்று மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன் படி, மலேசிய அரசு இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 

இதுகுறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்ததாவது, "முதல் முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக சுமார் 90 ஆயிரம் முட்டைகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் ஏற்றப்பட்டு மலேஷியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த முட்டைகள் அனைத்தும் மலேசியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first time egg export to maleysia from namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->