சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து வருவது மட்டுமல்லாமல், ஐ.எஸ் போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் அங்கு செயல்பட்டு வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடும் சிரியாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று சிரியாவின் பாலைவனப்பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

அதில், பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என்று மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty three peoples died for isis deadlist attack in syria


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->