தானிய ஒப்பந்ததிலிருந்து விலகும் முடிவை ரஷ்யா திரும்பப் பெற ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைன் மீதான தாக்குதலை எதிர்த்து ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யாவிலிருந்து கருங்கடல் வழியாக செய்யப்படும் தானிய ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டது.

இதையடுத்து ஐநாவின் முயற்சியால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான தானிய ஒப்பந்தம் துருக்கி முன்னிலையில் கையெழுத்தானது.

ஆனால் ரஷ்யா மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பிரிட்டன் உதவியதாக கூறி ரஷ்யா தானிய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் ரஷ்ய அறிவித்த இந்த முடிவை திரும்ப பெறுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஷ்யாவின் இந்த முடிவால் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தீர்க்க தேவையான தானியங்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதி முற்றிலும் தடைபடும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU urges Russia to revoke its decision to withdraw from grain deal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->