அமேசான் காட்டில் இருந்து தப்பி வந்த விலங்குகளுக்கு சிகிச்சை..! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக எரிந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகளில் இருந்து தப்பித்து வந்த விலங்குகளை தன்னார்வலர்கள் மீட்டு முதலுதவி, சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் ஏழை நாடாக மற்றும் பல்லுயிர் பெருக்கத்தில் பணக்கார நாடாகவும் திகழும் பொலிவியாவின் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களை அமேசான் காட்டுத் தீ அழித்துள்ளது.

அங்கே பலவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. காட்டுத் தீயின் வெப்பத்தில் இருந்து தப்பி வந்த விலங்குகளை வன உயிர் ஆர்வலர்கள் மீட்டு வருகின்றனர்.

விலங்குகளின் உடல் முழுவதும் தீக்காயத்துடன், கை இல்லாமல் கால் இல்லாமலும் உயிரை மட்டும் பிடித்து கொண்டு வந்த விலங்குகளும் உண்டு. அவை தீயைக் கண்ட மிரட்சியில் இருந்து மீளவே சில நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், முதலுதவிக்குப் பின், வனம் சீரானால் அவற்றைத் திருப்பி காட்டுக்குள் அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் வனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விலங்குகளுக்கு குடிநீரையும் ஏற்பாடு செய்து வைத்து மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் விலங்குகள் மிகவும் பாதிக்க பட்டுள்ளது என்பது மிகவும் வருத்தம் தரும் நிகழ்வாக இருக்கிறது. இதில் இருந்து மீண்டெழும் வரைக்கும் விலங்குகளுக்கு சிரமமாகவே இருக்கும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

escaping animals should be get treatment in amazon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->