மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முக்கிய முடிவெடுத்த இங்கிலாந்து.. கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை உணவகத்தில் உணவருந்தும் நபர்களுக்கு 50 விழுக்காடு கட்டணத்தை அரசு ஏற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் அதிகபட்சம் 10 பவுண்ட் தள்ளுபடி கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தினை இங்கிலாந்து அரசு அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. 

மேலும், 4 பேர் கொண்ட குடும்பம் 80 பவுண்டிற்கு சாப்பாடு சாப்பிட்டு இருந்தால், 40 பவுண்ட் தொகை செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது நாட்டு மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் வகையில் கொண்டு வரப்படவுள்ளதாக அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இந்த திட்டங்கள் பதிவு செய்யப்பட்ட உணவகம் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும், மக்களுக்கு தள்ளுபடி வழங்கும் தொகையை அரசு 5 நாட்களுக்குள் வங்கியின் கணக்குகள் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. உணவகம் மற்றும் மதுபான விடுதி போன்றவற்றில் பணியாற்றி வரும் 18 இலட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் வகையில் இந்த முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகளில் 5 இலட்சம் பவுண்ட் வரை உள்ள சொத்துக்களுக்கு, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை முத்திரை வரியை அரசு இரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. மதிப்பு கூட்டுவரிகளும் 20 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 18 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களை பணியமர்த்தும் நிறுவனத்திற்கு 1000 பவுண்டுகள் ரொக்க போனஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஏழ்மையான குடும்பத்திற்கு 10 ஆயிரம் பவுண்ட்கள் கடன் பெரும் திட்டமும், சுற்றுப்புற சூழலை நட்புறவாக மாற்ற 5 ஆயிரம் பவுண்டுகளும் மானியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England govt announcement for peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->