முதல் பறக்கும் கார் டெமோ எப்போது..? டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியூ அப்டேட்..!
Elon Musk has given an update on Teslas first flying car demo
உலகின் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் காரை வடிவமைக்க போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து, அதனை டெமோ காட்ட உள்ளதாக பிரபல தொழிலதிபர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றிப் எலான் மஸ்க் பேசிவருகிறார். தற்போது அதுகுறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும், 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து, அதன் டெமோவைக் காண்பிக்க உள்ளதாக பாட்கேஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் நடத்தவிருக்கும் பறக்கும் கார் மெமோ நிகழ்ச்சி, வரலாற்றிலேயே மறக்க முடியாக ஒரு நிகழ்வாக இருக்கும் என்றும் அவே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்த கார்களுக்கு இறக்கை இருக்குமா..? என்ற கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், கார் வெளியாவதற்கு முன்னர் அது பற்றிய எந்த தகவலையும் வெளியிட முடியாது என்றும், ஆனாலும், இதுவரை நடந்த வெளியீடுகளிலேயே அது ஒரு மறக்கமுடியாத தயாரிப்பாக இருக்கும் என்றும் வியப்பூட்டியுள்ளார்.
English Summary
Elon Musk has given an update on Teslas first flying car demo