18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அமேசான் முடிவு.! - Seithipunal
Seithipunal


பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்டவை சமீபத்தில் பெரிய வேலை இழப்புகளை அறிவித்துள்ளன. அதில், சுமார் 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு அமேசான் நிறுவனத்தில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும், இருந்தாலும் அதன் 15 லட்சம் பணியாளர்களில் இது ஒரு பகுதி ஆகும். இந்த பணியாளர்கள் நீக்கத்தில் அமேசான் பிரஷ் மற்றும் அமேசான் கோ உள்ளிட்டவையும் அடங்கும். 

இந்த பணிநீக்கம் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்ததாவது:- "கடந்த காலங்களில் அமேசான் நிறுவனம் நிச்சயமில்லாத மற்றும் கடினமான பொருளாதாரங்களை எதிர்கொண்டது.

அதனால், இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும்" என்று அவர் தெரிவித்தார். 

அமேசான் நிறுவனம் வேலை இழப்பு கட்டணம், இடைநிலை சுகாதார காப்பீட்டு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆதரவு உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது.

இதேபோன்று சேல்ஸ்போர்ஸ், சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் தெரிவித்துள்ளது. சேல்ஸ்போர்ஸின் உயர்மட்டத் தரவரிசையில் ஏற்பட்ட ஒரு அதிர்வின் காரணமாக இந்தப் பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனத்தின் இருபத்து மூன்று ஆண்டுகால வரலாற்றில் இது மிகப் பெரிய பணி நீக்கமாகும். இதைத்தொடர்ந்து பனி நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து மாத ஊதியத்துடன், உடல்நலக் காப்பீடு, தொழில் வளங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெறுவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eighteen thousand employees dismiss in amezon company


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->