ஈபிள் கோபுரத்தில் இருந்து குதித்த மர்ம நபர்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் திறக்கப்படும் முன்பே மர்ம நபர் ஒருவர் காவலர்களின் கவனத்தை திசை திருப்பி கோபுரத்தின் உள்ளே நுழைந்துள்ளார். 

இதனை அங்கிருந்த காவலர்கள், சிசிடிவி கேமராவின் காட்சி பதிவு மூலம் பார்த்துள்ளனர். இருப்பினும் நுழைந்த மர்ம நபர் கோபுரத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தி மேலே சென்று விட்டார். 

சுமார் 330 மீட்டர் உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற மர்ம நபர் முதுகில் பாராசூட் மாட்டி அங்கிருந்து குதித்துள்ளார். 

இது குறித்து பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் அவரை கவனித்து பாராசூட் மூலம் அருகில் இருந்த விளையாட்டு மைதானம் ஒன்றில் தரை இறங்கிய அவரை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் அவர் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால் காலை 9 மணிக்கு வழக்கமாக திறக்கப்படும் ஈபிள் கோபுரம் நேற்று தாமதமாக திறக்கப்பட்டது. ஈபிள் கோபுரத்துக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டலுக்கும் நேற்று கைதான இளைஞருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர் குறித்த விவரங்கள் போலீசார் வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eiffel Tower top jumped person Police investigation


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->