#BREAKING : துருக்கி, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்படி, இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்படி, ஜெயப்பிரவில் கடற்கரை ஒட்டி இருந்த உணவகம் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்து உள்ளது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இன்று காலை 10.10 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபாசியாபத் பகுதியில் இருந்து 265 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Afghanistan 4.3 rictor measurement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->