துபாய் சுற்றுலா பயணிகளே.. 3 ஆண்டுகளில் பறக்கும் டாக்ஸி... துபாய் அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


2026ம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்த துபாய் அரசு திட்டம்..!!

உலகில் மிக உயர்ந்த கட்டிடங்களை கொண்ட துபாயில் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்த கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துபாய் அரசு முயற்சித்து வருகிறது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் துபாய் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பறக்கும் டாக்ஸிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் காலிபோர்னியாவை சேர்ந்த ஜோபி ஏவியேசன் நிறுவனத்தின் பறக்கும் டாக்ஸியை 2026 ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் அறிவித்துள்ளார்.

மொத்தம் ஆறு இறக்கைகள் கொண்ட இந்த பறக்கும் டாக்ஸி அதிகபட்சம் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டவை.

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த டாக்ஸி மூலம் சுமார் 241 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். துபாயின் முக்கிய இடங்களில் பறக்கும் டாக்ஸி நிலையங்களை அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இதற்கான கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் விமான டேக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது கட்டணங்கள் குறையும் என துபாய் பொது போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சேவை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dubai govt plans to introduce air taxis by 2026


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->