அடுத்த அதிர்ச்சி.! 4,000 ஊழியர்கள் பணிநீக்கம்... டிஸ்னி முடிவு..! - Seithipunal
Seithipunal


உலகின் பொழுதுபோக்கு அம்சத்தில் ஜாம்பவானாக திகழும் டிஸ்னி, இணையதளம், சினிமா, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் கார்ட்டூன் என பல்வேறு வடிவங்களில் மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், போதிய வருவாய் ஈட்ட முடியாததாலும், நிறுவனம் முழுவதும் ஏற்படும் செலவுகளைக் குறைக்கவும், கடந்த மாதம் 7,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் பணி நீக்க நடவடிக்கையின் முதற்கட்டமாக, வரும் ஏப்ரல் மாதம் 4000 பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி முடிவு செய்துள்ளது.

இதை தொடர்பாக பிசினஸ் இன்சைடர் அறிக்கையில், மேலாளர்கள் நிறுவனத்தில் பணியில் இருந்து நீக்கப்படுபவர்களின் பெயர்களை தயாரித்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்குள் ஒரே கட்டமாகவோ அல்லது படிப்படியாக 4000 பேர் நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் தேவையற்ற செலவினங்களை குறைக்கவும், ஸ்ட்ரீமிங் வணிகத்தை மேம்படுத்தவும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disney plans to layoff 4000 employees


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->