கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற எட்டு இந்தியர்களுக்கு உளவு பார்த்த புகாரில் கத்தார் நாட்டில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  

இது குறித்து தகவலறிந்த இந்திய அரசு அதிர்ச்சி அடைந்ததுடன் முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட வழிமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death prison to eight indians in qatar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->