மியான்மரை மிரட்டிய மோக்கா புயல் - பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


மியான்மரை மிரட்டிய மோக்கா புயல் - பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு.!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான 'மோக்கா' புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதால் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

புயல் காற்றுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்தத்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்து தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. 

புயல் கரையக் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை அங்குள்ள நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 

அதிலும் குறிப்பாக ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death count increase in miyanmar for mokka storm


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->