பிஸ்கட் சாப்பிட்ட நடன கலைஞர் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டில் உள்ள லங்காஷையர் பகுதியைச் சேர்ந்தவர் ஓர்லா பாக்செண்டேல். பாலே நடன கலைஞரான இவர் தனது நடன கலை வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கில் வசித்து வந்தார். 

இவர், கனெக்டிகட் மாகாணத்தில் நியுவிங்டன் பகுதியில் உள்ள ஒரு கடையில் வெண்ணிலா புளோரண்டைன் குக்கீ என்ற பிஸ்கட்டை வாங்கினார். அந்த பிஸ்கட்டை உட்கொண்டதும் ஓர்லா பாக்செண்டேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பொதுவாக தனக்கு இருக்கும் உடல்நல பாதிப்பை கருத்தில் கொண்டு, ஒவ்வாமை எதிர்ப்பு ஊசியான எபிபென்னை ஓர்லா பாக்செண்டே எப்போதும் தன் வசம் தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், அவர் உடல் நல குறைவு ஏற்பட்டதும் உடனடியாக அந்த ஊசி அவருக்கு செலுத்தப்பட்டது. 

இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பிஸ்கட்டை தயாரித்த குக்கி யுனைடெட் நிறுவனம் அந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஓர்லா பாக்செண்டே குடும்பத்தினர் தெரிவித்ததாவது:- “ஈடு செய்ய முடியாத இழப்பால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளோம்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dance master orla paksande passed away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->