மீண்டும் ஜூன் இரண்டாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 4,801,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 316,671 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1,858,170 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.  இன்றுடன் நேபாளத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை ஜூன் இரண்டாம் தேதி வரை நீட்டித்துள்ளனர். இது தொடர்பாக நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் டாக்டர் யுப்ராஜ் கத்தி வாடா தெரிவிக்கையில், வைரஸின் தாக்கத்தை கருத்தில்கொண்டு நேபாளத்தில் ஜூன் இரண்டாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extension in nepal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->