தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு ரூ.1.75 கோடி அளிக்க கணவனுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


குடும்பம் என்பது கணவன் மனைவி என இருவரும் ஒன்றாக இணைந்து தங்களுடைய  வேலைகளை சமமாக பிரித்துக் கொண்டு செய்தால் இருவருக்கும் பரஸ்பர புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் கணவர்கள் பெரும்பாலும் வெளியில் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்யும் நிலை ஏற்படுகிறது.

 இதனால், பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதில் வேலைக்கு செல்லும் மற்ற நேரங்களிலாவது உதவி செய்யலாம் என பெண்கள் நினைக்கின்றனர்.

அதன்படி, கணவரிடம் சில உதவிகளை மனைவிகள் கேட்கும் போது கணவன்கள் சோம்பேறித்தனமாக அல்லது வேறு காரணங்களை கூறி மறுத்து விடுகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படுகிறது.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தன்னை வீட்டு வேலைகள் செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார் என இவானா என்ற பெண் ஒருவர் விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த பெண்ணின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு ரூ.1.75 மோடி அளிக்குமாறு கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court ordered the husband to pay Rs 1.75 crore to the wife who did the housework alone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->