பார்வை பறிபோவதற்குள் தன் குழந்தைகளுக்கு உலக நினைவுகளை வழங்க விரும்பும் தம்பதி.! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா நாடான கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் பெல்லட்டியர். இவரது மனைவி எடித் லேமே. இவர்களுக்கு மியா, காலின், லாரண்ட், லியோ என்ற 4 குழந்தைகள் உள்ளன. இதில் 3 பேருக்கு ரெட்டினிட்டிஸ் பிக்மென்டோ என்ற விநோத நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் படிப்படியாக கண் பார்வை இழந்து விடுவார்கள்.

இவர்களின் 3 குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பார்வைத் திறன் முற்றிலும் பறிபோகும் முன்பு உலகில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்ப்பதற்கு செபாஸ்டியன் குடும்பத்தினர் முடிவு செய்து, சுற்றுலா தளங்களை ரசித்து வருகின்றனர். 

இதுகுறித்து தந்தை செபாஸ்டியன் தெரிவித்ததாவது, எங்கள் 3 குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும், நாங்கள் உலகைச் சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளோம்.

அவர்கள் பார்வையை இழப்பதற்கு முன்னர் உலகில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு ரசிக்க நான் முடிவு செய்தேன். பல்வேறு நாட்டு கலாச்சாரங்கள் மற்றும் மக்களைக்காண அடுத்த 6 மாதத்தில் உலகின் பல்வேறு இடங்களுக்கு நாங்கள் செல்லவுள்ளோம். 

இதற்கு முன்பு 2021ல் நாங்கள் கிழக்கு கனடா பகுதியையும், பின்பு, கடந்த மார்ச் மாதத்தில் நமீபியா பயணத்தைத் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து மங்கோலியா முதல் இந்தோனேஷியா வரை சென்றோம். அவ்வப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எங்கள் பயணம் குறித்த புகைப்படங்களை பதிவுசெய்கிறோம். 

மேலும் வரும் காலத்தில் அவர்களது பார்வை பறிபோனாலும், அவர்கள் உலகைச் சுற்றிய நினைவுகள் படம் போல அவர்கள் மனதில் நிற்கும். அவர்களது மகிழ்ச்சிதான் எங்களது மகிழ்ச்சி என்றும், எங்களுக்கு அதுவே போதும் என்று செபாஸ்டியன் கூறியுள்ளார்.

குழந்தைகளின் பார்வை பறிபோய்விடும் என்றாலும், அவர்களது நினைவில் பசுமையான நினைவுகளை இடம்பெறச் செய்ய விரும்பிய இந்த பெற்றோருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple want to give their children worldly memories before they lose their sight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->