கச்சத்தீவு விழாவில், இந்திய மக்கள் பங்குபெற தடை - இலங்கை அரசு.! - Seithipunal
Seithipunal


கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோனியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்பதற்கு இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவானது, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த கச்சத்தீவு முதலில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த நிலையில், பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இந்திய நாட்டின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா - இலங்கை நாட்டை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விழா நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய மக்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க அனுமதி கொடுக்கலாமா என்பது குறித்து யாழ்ப்பாணத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் கொரோனா பரவல் காரணமாக கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona Kachchatheevu Srilanka TamilNadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal