பாகிஸ்தான் : சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் பிரபல சமையல் நிகழ்ச்சியான "தி கிச்சன் மாஸ்டர்" என்ற நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் சமையல் போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் கடையிலிருந்து பிரியாணியை வாங்கி கொண்டு வந்துள்ளார். இதனை நடுவர்கள் நிராகரித்துள்ளனர். இருப்பினும், போட்டியாளர் போட்டியில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-  

"சமையல் நிகழ்ச்சியின் நடுவர்கள் டேஸ்ட் பார்ப்பதற்காக கொண்டுவரப்படும் உணவு நீங்கள் தயாரித்ததாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறவில்லை. இந்த பிரியாணி பார்சலை வாங்குவதற்கு கடையில் கால்கடுக்க வரிசையில் நின்று கடுமையாக உழைத்துள்ளேன்.

அதனை, நடுவர்களுக்கு கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்" என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நடுவர்கள் போட்டியாளரை மீண்டும் போட்டியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த போட்டியாளர், நடுவர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த நடுவர்களில் ஒருவர் திடீரென எழுந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

competitor brings area biriyani on cooking show vedio viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->