சீனா அனுப்பிய ராக்கெட், பூமிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் ரிட்டன்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


சீன விண்வெளி நிலைய அமைப்புகளை சுமந்து சென்ற சீனாவின் லாங் மார்ச் 5 பி ராக்கெட், பூமியின் சுற்றுப்பாதையில் வீழ்ந்து தற்போது மீண்டும் பூமியில் கீழே விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ராக்கெட் கடந்த வாரம் வெற்றிகரமாக தியான்ஹே ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், இது எதிர்கால சீன விண்வெளி நிலையத்தின் (சி.எஸ்.எஸ் CSS - China Space Station) தங்கும் இடமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், துரதஷ்டவசமாக 30 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் சுற்றுப்பாதையை அடைந்தது மேலும் பயணிக்க இயலாமல் தனது கட்டுப்பாட்டினை இழந்தது. இதனையடுத்து, மீண்டும் பூமியில் எப்போது வேண்டும் என்றாலும், எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் விழலாம் என்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

மே 8 ஆம் தேதி சீன ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் சீன ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் எந்த பகுதியில் அல்லது எந்த நாட்டில்? விழும் என்ற பாதையினை கண்காணித்து வருகிறது. மே மாதம் 8 ஆம் தேதியன்று சீனாவின் ராக்கெட் விழும் பகுதியை கண்காணித்து வருவதை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகனும் கண்காணித்து வருவதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Rocket Out Of Control Falling On Earth America Track Possible Damage Path 5 may 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->