அதிரடி! நான் அதிபராக இருக்கும் வரை தைவான் மீது சீனா போர் தொடுக்காது!- டிரம்ப்
China not wage war Taiwan president Trump
கடந்த 1949-ல் சீனா நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ''தைவான்'' தனிநாடாக பிரிந்து சென்றது. அண்மைக்காலமாக தைவானை மீண்டும் சேர்த்துக்கொள்ள சீனா பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் தூதரக உறவை தைவானுடன் வேறு எந்த நாடுகளும் வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதன் காரணமாக 'தைவான்' எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் ஏற்படுத்தி வருகிறது. இதன் பதற்றத்தை கிழக்கு ஆசியா அவ்வப்போது உணர்ந்து வருகிறது.இதில் அமெரிக்கா நாடு தைவானுக்கு முழு ஆதரவு கொடுப்பதால், அமெரிக்காவும் சீனாவும் இந்த விவகாரத்தில் பகையுணர்வை காட்டி வருகின்றன.
சர்வதேச அளவில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், சீனா- தைவான் நடுவே மோதல் ஏற்பட்டால் மேலும் மோசமாகும் நிலை இருக்கிறது. இந்நிலையில், நான் அதிபராக இருக்கும் வரை தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்தாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப்:
இதுகுறித்து டிரம்ப் தெரிவிக்கையில், "சீன அதிபர் ஜி ஜின்பிங் தெளிவாக என்னிடம் சொன்னார். நான் அதிபராக இருக்கும் தைவான் மீது சீனா போர் தொடுக்காது என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். ஜின்பிங் என்னிடம், நீங்கள் அதிபராக இருக்கும் வரை நான் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார். சீனா இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும் ஜின்பிங் என்னிடம் தெரிவித்தார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
China not wage war Taiwan president Trump