சீன விமான விபத்து.. சீன அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ ஓசோன் நகருக்கு நேற்று முன்தினம் சென்றபோது மலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

குவாங்சி மகன் அதில் உள்ள மலைப் பகுதியின் மேல் முப்பத்தி ஓர் ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரும் மீட்பு குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்பு குழு ஈடுபட்டது.

இந்த நிலையில் விமான விபத்து ஏற்பட்டு 36 மணி நேரம் கடந்துள்ள நிலையில் விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை விமானத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விபத்துக்குள்ளான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China flight crash Chinese officer information


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->