சார்லிக்கு அமெரிக்காவின் உயர்ந்த ‘மேடல் ஆப் பிரீடம்’ விருது வழங்கப்படும்! அதிபர் டிரம்ப்!
Charlie will be awarded America highest award the Medal of Freedom President Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் உயிரிழந்தார்.
சார்லி கிர்க் படுகொலை குறித்து அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அரசு கண்டுபிடித்து தண்டிக்கும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விடுபடமாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும், சார்லி கிர்க்கின் அரசியல் மற்றும் சமூக பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவருக்கு அமெரிக்க அரசின் மிக உயர்ந்த ‘மேடல் ஆப் பிரீடம்’ விருது விரைவில் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Charlie will be awarded America highest award the Medal of Freedom President Trump