பொதுத் தேர்தலில் சீனாவின் தலையீடு - விசாரணை குழு அமைத்த கனடா - Seithipunal
Seithipunal


வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021 நடைபெற்ற தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் தேர்தலில் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், சீனாவிற்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்ற சீனா விரும்பியதாகவும், அதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளும், அரசியல் வல்லுனர்களும் பொது தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மூத்த முன்னாள் அதிகாரி டேவிட் ஜான்ஸ்டன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டு கூட்டாட்சி பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகளை ஆய்வு செய்வதற்கும், ஜனநாயகத்தை மேலும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கும், டேவிட் ஜான்ஸ்டன் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜான்ஸ்டன் குழுவின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும், பரிந்துரைகளின் தேவைக்கேற்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Canada setup panel to enquiry China intervention in elections


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->