இந்து கோவில் தலைவர் மகன் வீட்டில் துப்பாக்கி சூடு: மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை!  - Seithipunal
Seithipunal


கனடா, சர்ரே பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ்குமார் அதே பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண் கோவில் தலைவராக உள்ளார். 

இவரது மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில் கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. 

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து கோவில்கள் மீது கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சர்ரே பகுதியில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீதும் மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இது குறித்து சதீஷ்குமார் தெரிவித்திருப்பதாவது, எனது மகன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் கும்பலா என தெரியவில்லை. போலீசார் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய பிறகு தெரியவரும் என்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Canada Hindu temple leader son house Shooting police investigation 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->