ரியோ-டி ஜெனிரோ: கடத்தல் கும்பல் - காவல்துறையினர் மோதலில் 24 பேர் பலி.. வீதியில் இறங்கிய பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


கொள்ளைக்கும்பலுக்கு எதிராக காவல் துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ரியோ டி ஜெனிரோவில் ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனிரோ நகரம் உலகளவில் புகழ்பெற்ற நகரம் ஆகும். இந்நகரம் போதைப்பொருள் கும்பல், கடத்தல் கும்பல் போன்றவற்றுக்கும் பிரபலமானது. இவ்வாறாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அவ்வப்போது சுட்டுவீழ்த்தியும் வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை சேர்ந்து போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்பாடு கும்பலை தாக்க முடிவு செய்துள்ளது. சுமார் 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கி குற்றவாளிகளை தேடி சென்றுள்ளனர். 

இந்த தேடுதல் வேட்டையில் சுமார் 24 பேரை காவல் துறையினர் சுட்டுக்கொலை செய்ததாக தகவல் உறுதியாகியுள்ள நிலையில், அப்பாவி பொதுமக்களும் சிலர் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காவல் துறையினரின் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பான விஷயம் காவல் துறையினருக்கு எதிராக திரும்பி கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brazil Rio de Janeiro Police Against Action Drug Gang 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->