பாகிஸ்தானில் கருப்பு இரவு... ! தற்கொலைப் படை தாக்குதலில் 12 பயங்கரவாதிகள், 11 ராணுவ வீரர்கள், ஒரு சிறுமி பலி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பாஜூர் மாவட்டம் பகுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர வெடிகுண்டுத் தாக்குதலில் 11 ராணுவ வீரர்களும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர்.மேலும், பாகிஸ்தான் ராணுவ செய்திப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு, வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த பயங்கரவாதி, எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மீது வேகமாக மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மறைவிடங்களில் பதுங்கியிருந்த மற்ற பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினர்.இந்த திடீர் தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வெடிப்பின் அதிர்வால் அருகிலிருந்த குடியிருப்புகள் சேதமடைந்ததில், அப்பகுதியில் வசித்த ஒரு சிறுமியும் உயிரிழந்தது சோகத்தை அதிகரித்தது.இதற்கு பதிலடியாக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் அதே நாளில் பன்னு மாவட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Black night Pakistan 12 terrorists 11 soldiers and girl killed suicide attack


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->