எக்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


எக்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா - காரணம் என்ன?

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். இதனை கடந்த ஆண்டு பிரபல பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி அதில், பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன் பெயரையும், லோகோவையும் மாற்றினார்.

இந்த நிலையில், தீவு நாடான ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்ட விரோத பதிவுகளை சமூகவலைதளமான எக்ஸ் அதாவது டுவிட்டர், சரியாக கையாளவில்லை என்று அதன் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிலும், குறிப்பாக பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் உள்ளிட்டவைத் தொடர்பான பதிவுகளை எவ்வாறு கையாண்டது என்று கேள்வி எழுப்பியதற்கு எக்ஸ் நிறுவனம் முழுமையாக விளக்கம் அளிக்கவில்லை. 

இதனால், எக்ஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எக்ஸ் நிறுவனம் இதனை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austrelia govt fine to x company


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->