விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்! கடலுக்கு அடியில் கிடைத்த மனித உடல் பாகங்கள்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று, எம்.ஆர்.எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டர் விட்சன்டே தீவுகளுக்கு அருகில் பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் விமானக் குழுவை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அவர்களை மீட்பு படையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், கடலுக்கு அடியில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கிரெக் பில்டன் குயின்ஸ்லாந்தில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல் பாகங்கள் தற்போது நீருக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மேற்பரப்பில் இருந்து சுமார் 40 மீட்டர் கீழே ஹெலிகாப்டரின் பாகங்கள் இருந்தன. மனித உடல் பாகங்களை, ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அடையாளம் காணப்பட முடியாது. 

தேடல் குழுவின் முயற்சிகள், வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தடைபட்டுள்ளன. இது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடுதல் குழுக்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia military helicopter exercise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->