புவி வெப்பமயமாதலால் சத்தமே இல்லாமல் உருகி வரும் ஆர்டிக்.. ஆதிக்கத்தை விட்டு உலகை காப்பாற்ற ஆய்வாளர்கள் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உலகின் வட துருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசம் மற்றும் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா பணிகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். இங்கு பெரும் பணிகள் மட்டுமே காணப்படும் நிலையில், பல நாடுகளை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். 

அண்டார்டிகா தொடர்ந்து புவி வெப்பமயமாதல் பிரச்சனையில் உருகி வருவதாக பல வருடமாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். முழுக்க முழுக்க மனித செயல்பாடுகளால் மட்டுமே புவி வெப்பமடைந்து, அதன் பலன்களை நாம் அனுபவித்து வருகிறோம் என்று ஆராய்ச்சியார்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டிக் பிரதேசத்தின் கோடைகாலங்களில் கடல்களில் காணப்படும் பணிகள் மெல்ல உருக தொடங்குகிறது. இதனால் ஆர்டிக் பிரேதேசத்தில் வாழ்ந்து வரும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற அரசு துறையினருக்கு அனைத்து வகையான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது.

உலக நாடுகள் ஆர்டிக் பிரதேசங்களில் செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டு, மனிதர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த தேவையான ஆய்வுகள் மற்றும் அதற்கான செயல்பாடுகளை கையில் எடுத்தால் மட்டுமே எதிர்கால சந்ததிக்கு பிரச்சனை இருக்காது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்.

வடதுருவத்தில் உள்ள ஆர்ட்டிக்கை ரஷியா விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறும் நிலையில், அமெரிக்காவும் தன் பங்கிற்கு ரஷியாவை எதிர்த்து நிற்கிறது. இதில், ஆர்டிக் பிரதேசத்திற்கு சம்பந்தமே இல்லாத சீனாவும் தனது மூக்கினை நுழைத்து ஆர்ட்டிக்கை வைத்து குளிர்காய நினைக்கிறது. 

ஆர்டிக் பிரதேசத்தை தக்க வைக்க ரஷியா, அமெரிக்கா, டென்மார்க் பெரும் அளவிலான பணத்தையும் முதலீடு செய்து வரும் நிலையில், பணிகளை கடந்து கண்காணிக்கும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இது இயற்கையின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் பெரும்பாலும் ரஷியாவே பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டிக் விஷயத்தில் சீனாவின் தலையீடு ஒருபுறம் வரவேற்கத்தக்க வகையில் இருந்தாலும், மற்றொரு புறம் இது ரஷியாவிற்கு பிடிக்கவில்லை. தனது அண்டை நாடான சீனா இது தொடர்பான விஷயத்தில் மூக்கை நுழைக்கும் விஷயத்தில் ரஷியா தெளிவாக இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும் ஆர்டிக் விஷயத்தில் உலக நாடுகள் அலட்சியமாக அல்லது தனது அதிகாரத்தை நிலை நிறுத்த நினைத்து செயல்படும் அனைத்தும் புவிக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Artic Region Heavily Affected Global Warming Statement Confirm by Bloomberg Opinion


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->