சிங்கப்பூரைப் போல நம் நாட்டை மாற்ற, இதை செய்தால் போதும்….! - Seithipunal
Seithipunal


 

நம்ம கோயம்புத்துார் அளவிற்குத் தான், சிங்கப்பூர் என்ற நாடே இருக்கிறது. பரப்பளவில் மிகவும் சிறிய நாடு. அதன் வளர்ச்சி, அன்னாந்து பார்க்கும் உயரத்தில் உள்ளது. அந்த நாட்டின் தொழில் வளர்ச்சி, நாட்டின் சட்ட திட்டம் எல்லாம் அதற்கு முதல் காரணங்கள். அதனால் தான், இன்று உலகமே வியந்து பார்க்கும் நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

காரணம், அங்குள்ள அரசாங்கத்தின் உன்னத செயல்பாடுகள் தான்…!

அங்குள்ள சிங்கப்பூர் குடி மக்கள் படித்தவுடன், குறைந்தது 3 ஆண்டுகள் கண்டிப்பாக, சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

அந்த மூன்று ஆண்டுகளில், அந்த ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, கடுமையான போர்ப் பயிற்சி, உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். சிங்கப்பூரில் போர் வந்தால், அங்குள்ள குடிமக்களும், போரில் கலந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட விதி இது.

மேலும், இப்படி ராணுவப் பயிற்சி அளிக்கும் காலங்களில், அங்கு பயிற்சி பெறுபவர்கள், தங்கள் தேசப் பற்றை வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் தேசத்திற்காக, உயிரைக் கொடுக்கவும் மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

அதே போல், வெறும் ராணுவப் பயிற்சியுடன் அரசு சும்மா இருந்து விடுவதில்லை. ஒரு குடும்பத் தலைவர் இறந்து போனால், அவரது சொத்துக்களை அவர்களது பிள்ளைகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறது. அவர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்குகிறது.

அவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளிலும், அரசாங்கம் தலையிட்டு, அக்கரை கொண்டு, அந்த பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்கிறது.

இதே போல், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும், கட்டாய  ராணுவப் பயிற்சி வழங்கப் பட்டால், உலகிலேயே, மிகவும் பலம் வாய்ந்த உயர்ந்த குடியரசு நாடாகத் திகழும் நம் இந்தியா.

நாடும் முன்னேறும். மக்களும் வேலை வாய்ப்பு பெறுவர். இந்த நாட்டின் மதிப்பினை உணராதவர்கள் கூட, அதன் சிறப்பினைப் போற்றி, அவசரக் காலங்களில், போருக்கும் தயாராக இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an idea to change our India like Singapore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->