இருவரும் ஒத்துழைத்த பின்னர் நான் நடுநிலையாளராக செயல்படுகிறேன்..! டிரம்ப் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை என்பது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தன்னுடன் இணைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாக்கிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த செயலையே மேற்கொள்காட்டி அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபரான ட்ரம்பை சந்தித்து பேசினார். இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது.,  

பாகிஸ்தான் - இந்தியா உடனான காஷ்மீர் பிரச்சனையில் நடுநிலையாளராக செயல்பட்டு முடிவை எடுக்குமாறு இந்தியாவின் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கவே., இதனை அறிந்த இந்திய மக்கள் பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிய நிலையில்., இந்த கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்து மறுப்பு தெரிவித்தது. 

modi with imran khan, மோடி இம்ரான்,

இந்த சமயத்தில்., அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்குள்ள வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களை சந்தித்து., இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீர் பிரச்சனையானது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்த பிரச்சனையை தீர்ப்பது இரு நாடுகளையும் சார்ந்ததாகும். 

இந்த பிரச்சனையில் நடுநிலையாளராக வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது மோடியிடம் உள்ளது. இரு நாட்டின் தலைவர்களும் மிக சிறந்த தலைவர்களே., இரு நாட்டின் தலைவர்களும் விருப்பினால் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவி செய்ய தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american president speech about kashmir problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->