அமெரிக்க அதிபர் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகை.. இந்தியாவில் நடக்கவிருக்கும் மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வரும் 24 ஆம் தேதியன்று, தனது மனைவி மெலினியா டிரம்புடன் இந்தியாவிற்கு வருகைதரவுள்ளார். இவர்கள் இருவரும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். 

இந்த நேரத்தில் புதுடெல்லிக்கு முதலில் வருகை தந்து, பின்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், பிரதமர் மோடியுடன் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் இந்திய மக்களுக்கு உரையாற்றவுள்ளார். 

trump, Melanie trump,

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை அதிகரிக்கும் பயணம் என்ற குறிப்பில், இது தொடர்பான தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கடந்த வாரத்தின் போது, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், கடந்த செப்டம்பர் மாதத்தின் போது ஹஸ்டன் நகருக்கு சென்ற மோடிக்கு பலத்த வரவேற்பும், மோடியை கவுரவிக்கும் வகையில் "ஹவுடி மோடி" என்றும் அதிபர் ட்ரம்பின் சார்பாக கொடுக்கப்பட்டது. 

trump, modi, modi with trump,

தற்போது இந்திய பயணம் தொடர்பான தகவல் வெளிவந்துள்ள நிலையில், இது குறித்து அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கையில் பேசினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மோடி மிகசிறந்த நல்ல மனிதர். 

இந்தியாவிற்கு செல்லும் நாளை நோக்கி நான் காத்திருக்கிறேன்... இந்த மாத இறுதியில் நான் மற்றும் எனது மனைவி இந்தியாவிற்கு செல்லவுள்ளோம். இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த பயணம் எங்களின் மற்றும் இரு நாடுகளின் நட்புறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american president Indian country visit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->