உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவுக்கு வெற்றியாக இருக்காது - அமெரிக்க அதிபர் - Seithipunal
Seithipunal


ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது. 

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். பின்பு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தலைநகரில் சந்தித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து போலாந்து சென்ற அமெரிக்கா அதிபர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவுக்கு வெற்றியாக இருக்காது என்றும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி ஒரு வருடம் நிறைவடையும் நிலையிலும் தலைநகருக்கு வலுவாக நிற்கிறது, சுதந்திரமாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழும் விரும்பும் ரஷ்ய குடுமக்களை எதிரியாக பார்க்கவில்லை என்றும், புடினால் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும், ஆனால் ஒருபோதும் நாட்டைக் கைப்பற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America president says Ukraine will never be a victory for Russia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->