டேக்காப் ஆகியதும் எஞ்சினில் சம்பவம்... உயிரை கையில் பிடித்து கதறிய 231 பயணிகள்..! - Seithipunal
Seithipunal


வானில் பறந்த சில நிமிடங்களுக்கு உள்ளாகவே, விமானத்தின் என்ஜினில் தீ பற்றிய நிலையில், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் தலைநகரான டென்வெர் விமான நிலையத்தில் இருந்து, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UA328 போயிங் 777-200 ரக விமானம், சுமார் 231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் அங்குள்ள ஹொனோலுலு (Honolulu) நகருக்கு புறப்பட்டு உள்ளது. 

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே, வலதுபுறம் என்ஜினில் தீ பற்றியுள்ளது. இன்ஜின் முழுவதும் தீ பரவத் தொடங்கிய நிலையில், தொடர்ந்து இன்ஜின் பாகங்கள் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை மீண்டும் டென்வெர் விமான நிலையத்துக்கு அவசரமாகத் திரும்பி பத்திரமாக தரையிறக்கினார். 

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், விமானத்தின் பாகங்கள் தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு கழகம், " தரையில் சிதறிக் கிடக்கும் இன்ஜின் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என்றும், இந்த பாகங்கள் ஆய்வுக்கு தேவைப்படுகிறது " என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த விமானத்தில் உள்ள எஞ்சின் 26 வருடங்கள் பழமையான PW 4000 ரக இன்ஜின் என்றும், எஞ்சினின் மின்விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Florida Flight UA328 Boeing 777 Engine Failure and Fire Luckily 231 Passengers Escaped


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->