உலகநாடுகளை அணிதிரட்டும் அமெரிக்கா.. கதறப்போகும் சீனா..!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக அமெரிக்காவிற்கும் - சீனாவிற்கும் பொருளாதார ரீதியான பிரச்சனை இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக தென்சீன கடல் ஆதிக்கம் மற்றும் அண்டை நாடுகளை சீனா துன்புறுத்தி வந்தது, ஹாங்காங் போராட்டம், உய்கூர் இன மக்கள் துன்புறுத்தல் என சீனாவின் அட்டூழியம் தொடர்ந்து வந்தது. 

இது குறித்து அமைதியான முறையில் துவக்கத்தில் அமெரிக்கா எச்சரித்து வந்த நிலையில், உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்காவை சீனா மட்டம் தட்டி வந்தது. ஆத்திரமடைந்த அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடையை விதித்தது. இதன்பின்னர், சீனாவிற்கும் - அமெரிக்காவிற்கும் பனிப்போர் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனா உலக நாடுகளிடம் பல விஷயங்களை மறைத்துவிட்டது. 

மேலும், அமெரிக்கா உலக நாடுகளில் கடுமையான அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை சந்தித்தது. இதனால் அமெரிக்கா உச்சகட்ட கோபத்தில் இருந்த நிலையில், சீனாவின் பார்வை இந்தியா மீது திரும்பி, பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. அணைத்து விஷயங்களும் கவனித்து வந்த அமெரிக்கா, பல அதிரடி நடவடிக்கையை கையில் எடுக்க துவங்கியது. 

இதற்கான பல தகவலையும் அதிகாரபூர்வமாக அமெரிக்கா அறிவித்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சீனாவின் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America call world countries against china to make Lesson CCP


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->