பெண் தோழிக்காக அமேசான் நிறுவனர் செய்த செயல்.! வாய்பிளக்கவைக்கும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல ஆன்லைன் சேல்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos) தன்னுடைய பெண் தோழிக்காக 165 மில்லியன் டாலர் மதிப்பில் (இந்திய மதிப்பில் ஆயிரத்து 178 கோடி ரூபாய்) பிரமாண்ட மாளிகையை வாங்கி இருக்கின்றார். 

கடந்த 1930ம் ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத்திற்காக அந்த மாளிகை வடிவமைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வீடு அமைந்து இருக்கின்றது. 

தற்போது பீசோஸ்இந்த வீட்டைத்தான் தன்னுடைய காதலிக்காக வாங்கி இருக்கின்றார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேடி அலைந்து தனது தோழிக்காக தற்போது இந்த 9 ஏக்கர் வீட்டை வாங்கி இருக்கின்றாராம் ஜெஃப் பீசோஸ். ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடியில் நிறைந்து கிடக்கும் தோட்டம் ஒரு வனம் போலவே காட்சி அளிக்கின்றது. 

இதனை புகைப்படத்தில் கண்டால் பிரமித்து போவீர்கள். அதற்கான புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amazon founder bought new house for girl friend


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->