ஏர்பஸ் 320 பி.கே.8303 விபத்துக்குள்ளானது எப்படி?.. விசாரணை தகவல்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரில் இருந்து கராச்சிக்கு 91 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர்பஸ் 320 பி.கே.8303 கராச்சியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் விபத்துக்குள்ளாகி 99 பேரில் 97 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இரண்டு பணிகள் மட்டுமே அதிஷ்டவசமாக உயிர்தப்பியிருந்தனர். 

இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமானம் லாகூரில் இருந்து உள்ளூர் நேரப்படி 1.05 மணிக்கு புறப்பட்ட நிலையில், கராச்சியில் இருக்கும் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 2.30 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டது. 

மதியம் சுமார் 2.30 மணியளவில் விமானம் கராச்சியில் இருந்து 15 மைல் கல் தொலைவில் 7 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டிய சூழலில், மாறாக 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது. விமானத்தின் உயரத்தை குறைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கராச்சி விமான நிலையத்திற்கு 10 மைல்கள் தொலைவில் 3 ஆயிரம் அடி உயரம் பறக்க வேண்டிய விமானம், 7 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது.

விமானத்தின் உயரத்தை குறைக்க இரண்டாம்கட்ட எச்சரிக்கை விடுத்த நிலையில், இறுதியில் ஒன்றும் பலனில்லாது விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

airbus a 320 pk 8303 flight crash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->