அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்​ - நடந்தது என்ன?

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருந்து அமெரிக்கா நாட்டில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஏர் இந்திய விமானம் ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். 

அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை அனுப்பி வைத்து, அதில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. 

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர். பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing in russia for engine problam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->