கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி பிரேசிலை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை.! - Seithipunal
Seithipunal


கண்கள் பெரிதாக இருந்தால் 'முட்டைக் கண்' என்று கிண்டல் செய்வார்கள். ஆனால் உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா என்பவர் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர், கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா கூறும்போது, எனது திறமை நிச்சயமாக ஒரு பரிசு. இது என் தந்தை, என் அம்மா மற்றும் படைப்பாளரிடமிருந்தும் வந்தது. மேலும் அவர் 20-30 வினாடிகளுக்கு கண்களை வெளியே எடுத்து அதன் பிறகு பழைய நிலைக்குத் திரும்பும் போது சில நொடிகள் பார்வையை இழக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man from Brazil pushed out his eyelids farthest Guinness record


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->