நல்லது செய்த மருத்துவருக்கு புகைப்படத்தால் வந்த துயரம்.! உண்மையை அறியாமல் பகிராதீர்கள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் லுயோ ஷான்பெங். அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்பவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று அவருக்கு தொடர்ந்து 20 மணிநேரம் அறுவை சிகிச்சை பணி தொடர்ந்து அவசர கதியில் இருந்ததால்., அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது உறங்கினார்.

இந்த பிரச்சனை தொடர்பான புகைப்பட காட்சிகளானது இணையத்தில் வெளியாகவே பெரும் வைரலாக உருவாகி., பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த புகைப்படத்தில் அவர் நோயாளியின் கையை பிடித்தவாறே உறங்குகிறார். 

இது குறித்த பிரச்சனை இணையத்தில் வைரலாகி அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது., அவருக்கு மொத்தமாக 5 அவசர சிகிச்சைகள் அடுத்தடுத்து வந்துள்ளது. மேலும்., மேற்கொண்ட ஒரு அறுவை சிகிச்சையானது சுமார் 8 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக எனக்கு கடுமையான உடல் அசதி ஏற்பட்டது. 

கடைசியாக அந்த நபருக்கு தக்க சமயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால்., அவருடைய கையானது இறுதிவரை பொறுத்த முடியாமல் போகும் என்ற காரணத்தால்., அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது கையை உடனடியாக கீழே வைத்தால் சிகிச்சை பலன் பெறாது என்ற காரணத்தால்., அவரது கைகளை பிடித்தவரே இருந்தேன். 

அந்த நேரத்தில் எனக்கு கடுமையான உடல் அசதி இருந்தாலும்., அதனை கண்டு கொள்ளாமல் அவரது கைகளை பிடித்திருந்தேன்., அந்த நேரத்தில் கண்களை மூடிய நான் எவ்வாறு உறங்கினேன் என்று தெரியவில்லை., இதனை புகைப்படம் எடுத்த நபர் தவறாக இணையத்தில் பரப்பவே., இது போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a Chinese doctor sleeping during operation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->