ரஷ்யா || அடுக்குமாடி கட்டிடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 9 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சகலின் தீவில் திமோவ்ஸ்கோய் நகரில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஐந்து மாடி கட்டிடத்தில் நேற்று காலை கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் கட்டிடத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த மீட்பு படைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 died in building collapse in Russia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->