அமெரிக்காவிற்கு எதிரான போர்... 8 லட்சம் மக்கள் ராணுவத்தில் சேர தயார்.! வடகொரியா - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஓராண்டாக கொரிய எல்லைப் பகுதியில் அணு ஆயுதம் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை வீசி சோதனை செய்து வருகிறது. மேலும் அமெரிக்கவுடனான தென்கொரியாவின் போர் பயிற்சியே வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த மார்ச் 13ஆம் தேதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை இல்லாத பிரம்மாண்ட முறையில் தென் கொரியா அமெரிக்க இடையேயான "சுதந்திர கேடயம்" என்ற போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, அமெரிக்க இடையேயான போர் பயிற்சி வடகொரியா மீதான படையெடுப்பிற்கு ஓர் ஒத்திகை என்றும், அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவிற்கு எதிரான போரில் ஈடுபட 8 லட்சம் மக்கள் வடகொரிய ராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருப்பதாகவும் , அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா தென்கொரியா இடையேயான போர் பயிற்சி தொடங்குவதை எதிர்த்தே கடந்த வாரம் வாசாங்போ-17 என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 lakh people ready to join north Korea army for the war against US


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->