பள்ளிவாசலில் சுவர்  இடிந்து விழுந்ததால் 7 பேர் பாலி..!  - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்தி கொண்டு இருந்தனர். 

அப்போது வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் வழிபாட்டு தலத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இதில் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து மீட்பு பணிக்கு தகவல் அளித்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு பணியாளர்கள்  மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 

3 சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நிலச்சரிவுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என நினைத்து அவர்களைத்  தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people died after the wall collapsed in the mosque..!


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->