கிரீஸ்: மோசமான வானிலையால் படகு கவிழ்ந்து விபத்து - 60 அகதிகள் மாயம் - Seithipunal
Seithipunal


கிரீஸில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்த விபத்தில் 60 அகதிகள் மாயமாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸை சுற்றி கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் துருக்கியில் இருந்து அகதிகளுடன் புறப்பட்ட பயணிகள் படகு ஒன்று எவியா தீவு அருகே பலத்த காற்றினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தகவலறிந்து விரைந்த கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு படையினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல் படை கப்பல் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த விபத்தில் 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் காணாமல் போய் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்த்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 refugee missing as boat sink near Greece


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->