அமெரிக்கா : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து - 6 பேர் பலி, 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் கார்பஸ் கிறிஸ்டிக்கு வடமேற்கே 60 மைல் தொலைவில் உள்ள ஜார்ஜ் வெஸ்ட் அருகே நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற மினி வேன் ஒன்று முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது.

அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் எதிரே வந்த கார் மீது மோதியது. இதையடுத்து பின்னால் வந்த மற்றொரு கார் கார் மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி மினி வேன் ஓட்டுநர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 killed 5 injured in 3 vehicle crash on Texas highway America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->